sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வாடிப்பட்டி - தாமரைப்பட்டி 'அவுட்டர் ரிங்' ரோடு பணிகள் ஜூலைக்குள் முடியும்: அடுத்த கட்டப் பணிகளையும் விரைவில் துவங்க எதிர்பார்ப்பு

/

வாடிப்பட்டி - தாமரைப்பட்டி 'அவுட்டர் ரிங்' ரோடு பணிகள் ஜூலைக்குள் முடியும்: அடுத்த கட்டப் பணிகளையும் விரைவில் துவங்க எதிர்பார்ப்பு

வாடிப்பட்டி - தாமரைப்பட்டி 'அவுட்டர் ரிங்' ரோடு பணிகள் ஜூலைக்குள் முடியும்: அடுத்த கட்டப் பணிகளையும் விரைவில் துவங்க எதிர்பார்ப்பு

வாடிப்பட்டி - தாமரைப்பட்டி 'அவுட்டர் ரிங்' ரோடு பணிகள் ஜூலைக்குள் முடியும்: அடுத்த கட்டப் பணிகளையும் விரைவில் துவங்க எதிர்பார்ப்பு


ADDED : ஜன 16, 2025 05:27 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''வாடிப்பட்டி - தாமரைப்பட்டி இடையே 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. வரும் ஜூலைக்குள் முடிக்கும் வகையில் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதேபோல முழுமையான அவுட்டர் ரிங்ரோடு பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும்'' என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

மதுரையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு 27 ஆண்டுகளுக்கு முன் மாட்டுத்தாவணி முதல் கப்பலுார் வரை 27 கி.மீ.,க்கு ரிங்ரோடு அமைக்கப்பட்டது. அதன் மறுபாதியாக மாட்டுத்தாவணி முதல் மூன்றுமாவடி, ஆனையூர் வழியாக பாத்திமா கல்லுாரி வரை ரோடு அமைக்கப்பட்டுள்ளது.

இக்கால கட்டத்தில் வாகன பெருக்கம் அதிகரித்துள்ளதால் தற்போது 'அவுட்டர் ரிங்ரோடு' அமைக்கும் பணி நடக்கிறது. 1999 - 2004 ல் மத்திய அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் மத்திய அரசு இதற்கான ஏற்பாட்டை துவங்கியது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பணிகள் துவங்கின.

அவுட்டர் ரிங்ரோடு


முதற்கட்டமாக வாடிப்பட்டி முதல் தாமரைப்பட்டி வரை 30 கி.மீ., தொலைவுக்கான ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே வாடிப்பட்டி, நத்தம் ரோடு பகுதிகளில் மேம்பாலங்களுடன் அமையும் இந்த ரோடு பணி 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. பணிகள் தீவிரமாக நடந்தாலும் முடிவடைய இன்னும் ஓராண்டாவது ஆகும் எனத் தெரிகிறது.இந்நிலையில் 2ம் கட்டமாக தாமரைப்பட்டி முதல் ராமநாதபுரம் ரோட்டில் மணலுார் வழியாக நெல்லை ரோட்டில் சிவரக்கோட்டையை கடந்து தென்காசி ரோட்டில் ஆலம்பட்டி வரை 70 கி.மீ.,க்கு ரோடு அமைக்கவும் ஏற்பாடு உள்ளது. இந்தப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடக்கிறது.

இதுகுறித்து திட்ட இயக்குனர் பரத்வாஜிடம் கேட்டபோது, ''வாடிப்பட்டி - தாமரைப்பட்டி இடையே 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. வரும் ஜூலைக்குள் முடிக்கும் வகையில் ரோடு பணிகள் தீவிரமாக நடக்கிறது. அடுத்த கட்டமாக ரோடு அமையும் பகுதிகளுக்கு திட்ட அறிக்கை தயார் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. அதற்கான அனுமதி கிடைத்ததும் பணிகள் துவங்கும்'' என்றார்.

மக்கள் எதிர்பார்ப்பு


மூன்றாம் கட்டமாக ஆ,லம்பட்டி முதல் சோழவந்தான் வழியாக வாடிப்பட்டிக்கு ரோடு அமைந்தால் அதன் முழு வட்டமும் நிறைவு பெறும். ஆனால் நீண்ட காலமாக அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் உள்ளது. முதற்கட்ட பணிகள் நிறைவடையும் முன்பே விரைவாக திட்ட அறிக்கையை துவங்கி தாமதமின்றி அவுட்டர் ரோடு பணிகளை முடிக்க வேண்டும் என மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆ,லம்பட்டி முதல் சோழவந்தான் வழியாக வாடிப்பட்டிக்கு ரோடு அமைந்தால் அதன் முழு வட்டமும் நிறைவு பெறும்.






      Dinamalar
      Follow us