ADDED : பிப் 04, 2026 07:15 AM
ஆண்டிபட்டி: வைகை அணைக்கு முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. மழைக்கான சூழல் முடிந்து தற்போது வெயிலின் தாக்கம் துவங்கியுள்ளது. இதனால் மலைப்பகுதிகளில் இருந்து ஆறுகள் வழியாக வரும் குறைந்த அளவு நீர் அணைக்கு செல்லும் முன்பே வற்றி விடுகிறது. பெரியாறு அணையில் இருந்தும் நீர் திறப்பு குறைந்துள்ளது.
கடந்த வாரம் வைகை அணைக்கு வினாடிக்கு 700 கனஅடி அளவில் இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று வினாடிக்கு 96 கனஅடியாக இருந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 45.83 அடியாக இருந்தது. அணை மொத்த உயரம் 71 அடி. அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கனஅடி நீரும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கனஅடி நீரும் வெளியேறுகிறது.

