/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகை வடகரை ரோடு பணி 60 சதவீதம் முடிவு மேம்பால பணிகளும் தீவிரம்
/
வைகை வடகரை ரோடு பணி 60 சதவீதம் முடிவு மேம்பால பணிகளும் தீவிரம்
வைகை வடகரை ரோடு பணி 60 சதவீதம் முடிவு மேம்பால பணிகளும் தீவிரம்
வைகை வடகரை ரோடு பணி 60 சதவீதம் முடிவு மேம்பால பணிகளும் தீவிரம்
ADDED : செப் 05, 2025 04:02 AM
மதுரை: மதுரை வைகை வடகரை பகுதியில் திண்டுக்கல் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க ஆற்றங் கரையோரம் புதிய ரோடு அமைக்கும் பணி இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
திண்டுக்கல் ரோட்டில் வைகை பாலம் முதல் சமய நல்லுார் வரை ஆற்றங்கரையோரமாக 8 கி.மீ., தொலைவுக்கு இந்த ரோடு அமைகிறது. ஆற்றையொட்டி நிலம் கையகப் படுத்தி, தாங்கு சுவர் கட்டி, ரோடு அமைத்துள்ளனர்.
தற்போது திண்டுக்கல் ரோடு பாலம் வரை வந்து உள்ள இந்த ரோட்டின் ஒருபிரிவு பாலத்தின் கீழ் ஏற்கனவே உள்ள வைகை வடகரை ரோடுடனும், மற்றொரு பிரிவு இடதுபுறம் திரும்பி தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நோக்கி திரும்பி நெடுஞ்சாலையுடன் இணையும்.
இப்பணியில் இன்னும் 500 மீட்டருக்கு ரோடு அமைக்க வேண்டியுள்ளது. அடுத்த வாரம் ரோடு அமைந்த பகுதியில் தார் ரோடு அமைக்கும் பணிகள் துவங்கும். இப்பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் சீதாராமன் மற்றும் அதிகாரிகள் பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனர். இவ்வாண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோரிப்பாளையம் மேம்பாலம் தல்லாகுளம் துவங்கி நெல்பேட்டை வரை அமையும் இப்பாலப் பணிகளும் 60 சதவீதம் முடி வடைந்துள்ளது. தற்போது கோரிப்பாளைம் சந்திப்பில் சர்வீஸ் ரோடுக்காக அமெரிக்கன் கல்லுாரி வளாகத்தில் இருந்த வணிக கட்டடங்களை இடிக்கும் பணி நடக்கிறது.
இந்த இடத்தில் மேம்பாலம் அகலம் 11 மீட்டர், அதன் இருபுறமும் தலா 11 மீட்டர் அகலத்தில் சர்வீஸ் ரோடுகள் என மொத்தம் 33 மீட்டர் (நுாறு அடி) அகலத்தில் ரோடுகள் அமையும். வடக்கு பகுதி யில் இருந்து சர்வீஸ் ரோட்டில் வரும் வாக னங்கள் எளிதாக இடது புறம் திரும்பும் வகையில் இப்பகுதி அகலமாக உள்ளது.
இதில் மேம்பாலத்திற்கான கான்கிரீட் கர்டர்கள் தயாரிக்கும் பணியும் நடக்கிறது. மேலும் வைகை ஆற்றுக்குள் இப்பாலம் அமையும் பகுதியில் மேல்தள பணிகள் தீவிரமாக நடக்கின்றன. அக்டோபர், நவம்பரில் பருவமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் வர வாய்ப்புள்ளதால் துாண்கள் அமைக்கும் பணி துரிதமாக முடிந்துள்ளது.
மேல்தளம் பணிகளுடன், தென்கரை பகுதியில் ரோடு அமைக்க வேண்டி யுள்ளது. இப்பணிகள் எல்லாம் அடுத்தாண்டு தேர்தலுக்குள் முடிக்க தீவிரமடைந்துள்ளன.