/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சோழவந்தானில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
/
சோழவந்தானில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜூன் 04, 2025 01:28 AM

சோழவந்தான்: சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
அம்மனின் கொடிக்கு பூஜைகள் செய்து, நான்கு ரத வீதிகளில் எடுத்துவரப்பட்டது. அர்ச்சகர் சண்முகம் பக்தர்கள் ஆரவாரத்துடன் கொடியை ஏற்றினார். கொடி மரத்திற்கு பல வகை அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர்.
இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்பு கட்டுதல் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜூன் 2 முதல் 18 வரை 17 நாட்கள் திருவிழா நடைபெறும். தினமும் காலை அம்மன் சப்பரத்திலும், இரவில் சிம்மம், யாழி, கமலாசனம், காமதேனு, ரிஷப, அன்ன, குதிரை, யானை வாகனத்திலும் வீதி உலா நடைபெறும்.
முக்கிய நிகழ்வுகளாக ஜூன் 10 காலை பால்குடம், மாலை அக்னி சட்டி எடுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவர். ஜூன் 11 மாலை பூக்குழி, ஜூன் 17 தேரோட்டம், ஜூன் 18 தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறும். செயல் அலுவலர் இளமதி, கணக்கர் பூபதி ஏற்பாடு செய்து வருகின்றனர்.