sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜூன் 9ல் வைகாசி விசாக விழா

/

ஜூன் 9ல் வைகாசி விசாக விழா

ஜூன் 9ல் வைகாசி விசாக விழா

ஜூன் 9ல் வைகாசி விசாக விழா


ADDED : ஜூன் 05, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம் ஸ்ரீமுருகன் வைகாசி விசாக விழா கமிட்டி சார்பில் 53ம் ஆண்டு விசாக விழா ஜூன் 9ல் பைபாஸ் ரோடு சிருங்கேரி அபிநவ வித்யா தீர்த்த சபா மண்டபத்தில் நடக்க உள்ளது. அன்று காலை 5:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் விழா துவங்குகிறது. காலை 8:30 மணிக்கு ருத்ரஜபம், அபிேஷகம், 9:30 மணிக்கு தாம்பிராஸ் எஸ்.எஸ்.காலனி மீனாட்சி மகளிரணி குழுவினரின் கந்தசஷ்டி கவசம் பாராயணம் நடக்கிறது.

10:00 மணிக்கு லட்சார்ச்சனை, 11:30க்கு சதுர்வேத பாராயணம், மகா தீபாராதனை நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு நெரூர் ஸ்ரீவித்யா நரசிம்ம ஆஸ்ரமம் ஸ்ரீவித்யா சங்கர சுவாமிகள், மதுரை ஸ்ரீசக்ர ராஜேஸ்வரி பீடம் ராமானந்த சரஸ்வதி சுவாமிகளால் பஜனை, பஜனசாகரம் புஸ்தக வெளியீடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 4:30 மணிக்கு திருப்புகழ் இசை வழிபாடு, மாலை 6:00 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கின்றன.

தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சி, இரவு 7:30 மணிக்கு நாம சங்கீர்த்தனம், பஞ்சபதி, வள்ளி தேவசேனா கல்யாணம், டோலோத்சவம் ஆஞ்சனேய உற்ஸவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us