sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டேன் வைகோ ஆவேசம்

/

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டேன் வைகோ ஆவேசம்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டேன் வைகோ ஆவேசம்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டேன் வைகோ ஆவேசம்

1


ADDED : ஜன 04, 2025 04:11 AM

Google News

ADDED : ஜன 04, 2025 04:11 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி மேலுாரில் ம.தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு வரவேற்றார். எம்.எல்.ஏ., க்கள் பூமிநாதன், ரகுராமன், சதன் திருமலை குமார், பொதுச் செயலாளர்கள் ரொகையா, மல்லை சத்யா, மாநில பொருளாளர் செந்தில் அதிபன், அவை தலைவர் அர்ஜுன் சம்பத், தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் ராம உதயசூரியன் முன்னிலை வகித்தனர்.

வைகோ பேசியதாவது: இப்பகுதியில் 2015 எக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அரிட்டாபட்டியில் குடைவரை கோயில், சமணர் படுகை, 2300 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துக்கள், வற்றாத நீரூற்றுகள், மாநிலத்தின் முதல் பல்லுயிர் தலத்தை அழித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டேன். ரத்து செய்யத் தவறினால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து திட்டம் வகுத்துள்ளேன் என்றார்.

மாவட்ட துணை செயலாளர் அழகர்சாமி, நகர் செயலாளர் முத்துப்பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us