/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா
/
மதுரையில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா
ADDED : டிச 26, 2025 06:00 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு பா.ஜ., சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர்கள் தீபன்முத்தையா, சிவமுருகன், நகர் தலைவர் சவுந்தரபாண்டியன், கல்வியாளர் பிரிவு மாவட்டத் தலைவர் பிரசாத்கண்ணன், துணைத் தலைவர் நாகராஜ் மூத்த நிர்வாகிகள் வீரபிரபாகரன், வனராஜா, நகர் நிர்வாகிகள் கல்யாணகுமார், சந்திரபோஸ், தினகரன், பாலா, ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நிர்வாகி போஸ் தலைமையில் பழங்கள் வழங்கப்பட்டன.
சோழவந்தான்: முள்ளிப்பள்ளத்தில் பா.ஜ., தெற்கு மண்டல் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநிலச்செயலாளர் சிவமுருகேசபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மகாலிங்கம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, பொருளாளர் தங்கவேல்சாமி, செயலாளர் நாகு முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் முருகேஸ்வரி, நாட்டரசன், வெயில்முத்து, கேசவமூர்த்தி விஜிபாண்டி, ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
சோழவந்தான் மண்டல் சார்பில் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மண்டல் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் தங்கவேல்சாமி, அமைப்பாளர் பழனிவேல்சாமி, பார்வையாளர் உதய குமார், மண்டல் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் முத்துமணி, ரமேஷ், செந்தில், மகாலிங்கம், ரஞ்சித், கணேஷ், கருப்பத்தேவர், ராம்பிரசாத், ரமா உட்பட பலர் பங்கேற்றனர்.

