/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வல்லப சைனிக் பள்ளி மதுரையில் துவக்கம்
/
வல்லப சைனிக் பள்ளி மதுரையில் துவக்கம்
ADDED : அக் 14, 2025 05:36 AM
மதுரை: மதுரையின் முதல் சைனிக் பள்ளியான 'வல்லப சைனிக் பள்ளி'யில் இக்கல்வியாண்டில் (2025--26) ஆறாம் வகுப்புகள் அக்., 27 முதல் துவங்க உள்ளது.
மதுரை அழகர்கோவில் ரோட்டில் அமைந்துள்ள இப்பள்ளியில் நவீன கட்டமைப்பு, நுாலகங்கள், ஆய்வுக்கூட வசதிகள் உள்ளன. தேசிய பாதுகாப்பு தேர்வு, நீட், ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி, கல்விப் பயணங்கள், சாகச முகாம்கள், இரு நாள் சைக்கிள் பயணம் போன்றவை அளிக்கப்படுகின்றன.
கைப்பந்து, கூடைப்பந்து மைதானங்கள், துப்பாக்கி சுடுதல், பாட்மின்டன் விளையாட்டுகளுக்கு பிரத்யேக பயிற்சி உண்டு. சைனிக் ஸ்கூல் சொசைட்டி சார்பில் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் வரை உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
பள்ளித்தலைவர் வல்லப்பன், கமாண்டன்ட் செந்தில் குமார் கூறியதாவது: ஒழுக்கமான அதிகாரிகள், தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கும் சூழலுடன் உள்ளது. தற்போது 6 ம் வகுப்புக்கு சேர்க்கை துவங்கியுள்ளது. இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்றனர்.
விவரங்களுக்கு: 93848 17088