ADDED : மார் 16, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றப்பட்டு பூசாரிகளுக்கு காப்பு கட்டப்பட்டது.
மார்ச் 20 வரை சுவாமி புறப்பாடு நடக்கிறது. மார்ச் 21 மஞ்சுவிரட்டு, மாலையில் பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
மார்ச் 22ல் கிடாவெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் அன்று இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது.
மார்ச் 23 தேரோட்டம்,மார்ச் 24ல் மஞ்சள் நீராட்டு, மார்ச் 25ல் சுவாமி ஏழைகாத்தம்மன் கோயிலுக்குபுறப்படும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

