ADDED : ஜூன் 16, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள கிராசிங்கில் நேற்று காலை செங்கோட்டை ரயில் செல்வதற்காக 11:15 மணிக்கு கேட் மூடப்பட்டு, 10 நிமிடம் கழித்து திறக்கப்பட்ட போது அந்த வழியாக கடந்து சென்ற மினி வேன் ஒன்று மோதியது. இதனால் மீண்டும் கேட்டை திறப்பதில், மூடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து தற்காலிகமாக மாற்று கேட் அடைக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. ஒரு மணி நேர தாமதத்திற்கு பின்பு கேட் மீண்டும் திறக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. பின்னர் மதுரையில் இருந்து வந்த பொறியாளர் குழுவினர் மதியம் 3:00 மணிக்கு கேட்டை சீரமைத்தனர்.