/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'வந்தே பாரத்' ரயிலில் புகை நடுவழியில் நிறுத்தம்
/
'வந்தே பாரத்' ரயிலில் புகை நடுவழியில் நிறுத்தம்
ADDED : ஜூலை 10, 2025 07:37 AM
வடமதுரை : வந்தே பாரத் ரயில் பெட்டிக்குள் குளிர்சாதன கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறால் புகை கிளம்பியது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே நடுவழியில் அரை மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் வந்தே பாரத் ரயில் நேற்று காலை 8:45 மணிக்கு திண்டுக்கல்லை கடந்து சென்றது. வடமதுரை வேல்வார்கோட்டை பகுதியில் சென்றபோது ஒரு பெட்டிக்குள் புகை பரவியது. பதட்டமான பயணிகள் அடுத்த பெட்டிகளுக்கு சென்றனர். ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
ரயில்வே தரப்பில் கூறுகையில், சி14 பெட்டியில் தீ கண்டறியும் அமைப்பு இயங்கியது. இதையடுத்து ஓட்டுநர்கள் ரயிலை நிறுத்தினர். அதே ரயிலில் பயணித்த ரயில்வே பராமரிப்புப் பொறியாளர், பெட்டியின் கழிப்பறையில் 'ஏரோசால்' வகை தீயணைப்பான் கருவி திறந்திருப்பதை கண்டறிந்தார்.
இதன் காரணமாக பெட்டிக்குள் புகைமூட்டம் ஏற்பட்டது. கதவுகள் திறக்கப்பட்டு புகை வெளியேற்றப்பட்டு அக்கருவி சீரமைக்கப்பட்டது. இதன்பின் காலை 9:16 மணிக்கு திருச்சி புறப்பட்டுச் சென்றது' என்றனர். இந்த தாமதத்தின் காரணமாகவழியில் 'கிராசிங்' உள்ளிட்டவைகளால் 53 நிமிடங்கள் தாமதமாக எழும்பூர் சென்றது. இதனால் மறுமார்க்கம் 42 நிமிடம் தாமதமாக மதியம் 3:27 மணிக்குதிருநெல்வேலி புறப்பட்டது.