/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில்: எம்.எல்.ஏ., மனு
/
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில்: எம்.எல்.ஏ., மனு
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில்: எம்.எல்.ஏ., மனு
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில்: எம்.எல்.ஏ., மனு
ADDED : டிச 28, 2024 05:20 AM
மதுரை : மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவாவிடம் கோவில்பட்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜூ கோரிக்கை மனு வழங்கினார்.
அவர் கூறியதாவது: கோவில்பட்டி ஸ்டேஷனை விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், சங்கரன்கோவில், சாத்துார் தொகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளும் பயன்படுத்துகின்றனர். தற்போது அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.பல கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்யவுள்ளதாக தகவல் வரும் நிலையில் அந்த ரயிலும், சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலும் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும்.
ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காத வண்ணம் மேற்கூரை அமைக்க வேண்டும். கடம்பூர் ஸ்டேஷன் சுரங்கப்பாதைகள் அருகே கல் குவாரியும், கண்மாயும் இருப்பதால் எப்போதுமே தண்ணீர் தேங்கும் நிலையுள்ளது. தானியங்கி மோட்டார் மூலம் தேங்கிய நீரை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழங்கினேன். பரிசீலிப்பதாக கோட்ட மேலாளர் உறுதியளித்தார் என்றார்.

