/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாசுபடாமல் வண்டியூர் கண்மாய் பராமரிப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மாசுபடாமல் வண்டியூர் கண்மாய் பராமரிப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
மாசுபடாமல் வண்டியூர் கண்மாய் பராமரிப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
மாசுபடாமல் வண்டியூர் கண்மாய் பராமரிப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : டிச 20, 2024 03:03 AM
மதுரை: மதுரை வண்டியூர் கண்மாயை மாசுபடாமல் பராமரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டது.
மதுரை வழக்கறிஞர் மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு: வண்டியூர் கண்மாய் சீரமைப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.50 கோடி ஒதுக்கியது. கண்மாயை துார்வாரவில்லை. ஆகாயத் தாமரை, சீமைக் கருவேல மரங்களை அகற்றவில்லை. மாறாக கே.கே.நகர் கண்மாய்க் கரையிலுள்ள பூங்காவை மேம்படுத்துதல் மற்றும் வணிக நோக்கில் கடைகள் கட்டுமானப் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது. கண்மாய் மாசுபட வாய்ப்புள்ளது. அப்பணிக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுபோல் பொழிலன் என்பவர் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.
டிச.13ல் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு கட்டுமானப் பணிக்கு இடைக்காலத் தடை விதித்தது.
நேற்று அந்நீதிபதிகள் அமர்வு: இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது. ஏற்கனவே பிறப்பித்த அரசாணைப்படி பணியை மேற்கொள்ள வேண்டும். மாசுபடாமல் கண்மாயை பராமரிக்க வேண்டும். மோட்டார் படகுகளை பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.