/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விடியல் கிடைக்காத வி.ஏ.ஓ., அலுவலகம்
/
விடியல் கிடைக்காத வி.ஏ.ஓ., அலுவலகம்
ADDED : அக் 21, 2024 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: வஞ்சிநகரம் வி.ஏ.ஓ., அலுவலகம் 2002ல் கட்டப்பட்டது. போதிய பராமரிப்பின்றி சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன.
அனைத்து விவசாயி சங்க ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் துரைசாமி கூறுகையில், ''அலுவலக சுவரில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வடிந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. மழைநீருக்கு பயந்து ஆவணங்களை மூடையாக கட்டி மரப்பலகை மீது வைத்துள்ளனர்'' என்றார்.
தாசில்தார் செந்தாமரை கூறுகையில், தற்காலிகமாக அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்துள்ளேன்'' என்றார்.

