/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆபத்தான நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகங்கள்
/
ஆபத்தான நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகங்கள்
ADDED : ஆக 22, 2025 03:00 AM
பேரையூர்: பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகங்கள் இடியும் நிலையில் உள்ளது.
பேரையூர் தாலுகாவில் எஸ்.கீழப்பட்டி, சந்தையூர், ஜாரிஉசிலம்பட்டி, வேளாம்பூர், பேரையூர் பிட்2 உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலகம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த அலுவலகங்கள் பழுதடைந்து உள்ளன. கூரை பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளதால் உயிர் பயத்துடனே அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் மழை பெய்தால் மழை நீர் ஒழுகுவதால் இங்கு பராமரிக்கப்படும் அலுவலகம் சம்பந்தமான ஆவணங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள், மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பழுதடைந்த அலுவலக கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டடம் கட்ட வேண்டும்.