ADDED : ஜூலை 29, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டை வடிவேல்கரை மணிகண்டன். இவரது தாய் பார்வதி பெயரில் அனுபவத்திலிருந்த வீட்டிற்கு இலவச பட்டா வழங்க 2015 ஜூன் 17 ல் வடிவேல்கரை வி.ஏ.ஓ.,வாக இருந்த ஜெயபாரதி லஞ்சம் கேட்டார். மணிகண்டன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவரிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கியபோது ஜெயபாரதி போலீசாரிடம் பிடிபட்டார்.
லஞ்ச ஒழிப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா விசாரித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துவள்ளி ஆஜரானார். ஜெயபாரதிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

