ADDED : நவ 14, 2025 04:33 AM
பேரையூர்: பேரையூர் தாலுகா வருவாய் கிராமங்களில் அலுவலகங்கள் இடிந்து விட்டதால் வி.ஏ.ஓ.,க்கள் அருகில் உள்ள அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
பேரையூர் தாலுகாவில் 6 குறுவட்டங்கள் (பிர்க்கா), 72 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றில் எஸ்.கீழப்பட்டி, கூவலபுரம், செங்குளம், சிட்டுலொட்டி, சிலாபட்டி, வையூர் உட்பட பல கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலகம் இடிந்து விட்டது. இந்த வி.ஏ.ஓ.,க்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பணிபுரிகின்றனர்.
பெரும்பாலான வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்களில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆவணங்களை பாதுகாக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த கட்டடங்களை இடித்து விட்டு புதிதாக கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

