ADDED : அக் 01, 2024 05:18 AM

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான நீச்சல் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. மதுரை லேடிடோக் கல்லுாரி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்தது.
ஆடவர் போட்டி முடிவுகள் : 50 மீட்டர், 400 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவுகளில் யாதவா கல்லுாரி குணபாலன், 100 மீட்டரில் வி.எச்.என்.எஸ்.என். கல்லுாரி யுவன் ராஜ், 200 மீட்டரில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி தமிழ்ச்செல்வன், 800 மற்றும் 1500 மீட்டர் ப்ரீஸ்டைலில் அமெரிக்கன் கல்லுாரி மாணவர் நாகராஜ் முதலிடம் பெற்றனர்.
50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வி.எச்.என்.எஸ்.என். கல்லுாரி செல்வமுருகன், 100 மற்றும் 200 மீட்டரில் மதுரைக் கல்லுாரி ரத்தின விஷ்ணு முதலிடம் பெற்றனர். 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் மதுரைக் கல்லுாரி விஜயராகவன், 200 மீட்டர் பிரிவில் யாதவா கல்லுாரி விக்னேஷ் கார்த்திக் முதலிடம்.
50 மற்றும் 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் மதுரை காமராஜ் பல்கலை சந்தோஷ் செபாஸ்டின், 200 மீட்டரில் அமெரிக்கன் கல்லுாரி சந்தோஷ், 200 மீட்டர் ஐ.எம்.பிரிவில் மதுரைக் கல்லுாரி விஜய ராகவன் முதலிடம் பெற்றனர்.
4*100 ப்ரீஸ்டைல் ரிலே மற்றும் மெட்லே ரிலே பிரிவுகளில் வி.எச்.என்.எஸ்.என். கல்லுாரி மாணவர்கள் செல்வமுருகன், முகேஷ்குமார், மகாபிரபு, யுவன்ராஜ் முதலிடம் பெற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வி.எச்.என்.எஸ்.என். கல்லுாரியும் 2ம் இடத்தை அமெரிக்கன் கல்லுாரியும் பெற்றன.
மகளிர் பிரிவு:
மதுரை லேடிடோக் கல்லுாரி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். 50 மீட்டர், 100 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் ஜெபிஷா ரெபி, 50 மற்றும் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் லேடிடோக் கல்லுாரி ஸ்ரீநிதி, 50 மற்றும் 100 மீட்டர் பட்டர்பிளையில் சுகனி, 50 மீட்டர், 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக்கில் அக்ஷயா, 200 மற்றும் 400 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் அரீன் வர்ஷா, ஷபனா சேகர், 4*100 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே மற்றும் மெட்லே ரிலே போட்டியில் ஸ்ரீநிதி, அக்ஷயா, சுகனி, ஜெபிஷா ரெபி, முதலிடம் பெற்றனர்.
200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் மேலுார் அரசு கல்லுாரி கிருஷ்ணவேணி, பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் பாத்திமா கல்லுாரி மலர்விழி, பேக் ஸ்ட்ரோக்கில் மீனாட்சி அரசு கல்லுாரி ஆர்த்தி முதலிடம் பெற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மேலுார் அரசு கல்லுாரி 2ம் இடம் பெற்றது. உடற்கல்வி இயக்குநர்கள் ரமேஷ்குமார், சாந்தமீனா, நெல்சன், பால் ஜீவசிங், பாலகிருஷ்ணன் ஒருங்கிணைத்தனர்.