ADDED : ஜூலை 04, 2025 03:17 AM
மதுரை: வேளாண் துறையின் ஊட்டச்சத்து வேளாண் இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயிகள், விவசாயி அல்லாதோருக்கு மாவட்டத்தின் 13 வட்டாரங்களில் காய்கறி விதைகள், பழச்செடிகள், பயறு விதைகள் இன்று (ஜூலை 4) முதல் இலவசமாக வழங்கப்படுகிறது.
எர்ரம்பட்டி, பி.மேட்டுப்பட்டி, கள்ளிக்குடி பிட் 1, சொக்கம்பட்டி, வெள்ளியங்குன்றம், வெளிச்சநத்தம், வேப்படப்பு, பெருங்காமநல்லுார், கிழாங்குளம், விடத்தகுளம், நாகமலை புதுக்கோட்டை, எருமார்பட்டி, குட்லாடம்பட்டியில் இன்று மட்டும் சிறப்பு முகாம்கள் மூலம் நேரிடையாக விதைகள் வழங்கப்படுகின்றன. ஆதார் அட்டையுடன் வருபவர்களுக்கு கத்தரி, தக்காளி, வெண்டை, கொத்தவரை, கீரை, மிளகாய் விதை பாக்கெட்கள், பப்பாளி, கொய்யா, எலுமிச்சை கன்றுகள், மரத்துவரை, காராமணி, அவரை பயறு விதைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
பயன்பெற விரும்புவோர் tnhorticulture/tn/gov/in/tnhortnet இணையதளத்தில் பதிவு செய்தபின் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.