ADDED : நவ 22, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் மணவாளன், நகராட்சி கமிஷனர் பாரத்திடம் மனு கொடுத்தார். அதில், தினசரி மார்கெட்டில் ரூ.8 கோடியில் 152 கடைகள் கட்டப்பட்டன. இதில் 30 கடைகள் மட்டுமே ஆகஸ்ட் முதல் செயல்படுகின்றன.
அதேசமயம் மேலுார் நகர் முழுவதும் ரோடுகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்படுகின்றன. இதனால் மார்க்கெட் திறந்து 3 மாதங்களில் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே ரோட்டில் செயல்படும் கடைகளை காலி செய்து மார்க்கெட்டிற்குள் கொண்டு வரவேண் டும். அப்போதுதான் மக்களுக்கு பயனுள்ளதாக, வரிப்பணத்தில் கட்டிய பணமும் வீணாகாது என குறிப்பிட்டுள்ளார்.