/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆணவக் கொலைகளை கட்டுப்படுத்தாத தி.மு.க., அரசு வேலுார் இப்ராஹிம் குற்றச்சாட்டு

ADDED : ஆக 28, 2025 04:37 AM
வாடிப்பட்டி : வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நேற்று பா.ஜ.சிறுபான்மை அணி பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தார்.
அவர் கூறியதாவது: இந்த ஆலய பணத்தில் ஒரு கும்பல் ரூ.பல கோடி முறைகேடு செய்துள்ளது. பாதிரியார் புகார் அளித்தும் 9 பேரில் ஒருவரை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறுபான்மையினரின் காவலர் எனும் முதல்வர் ஸ்டாலின், நடவடிக்கை எடுக்காதது கிறிஸ்தவ மக்களுக்கு இழைத்த அநீதி. தி.மு.க., ஆட்சியில் ஆலயம், மசூதிகளில் ஊழலை கண்டு கொள்ளாமல் வாக்கு வங்கிக்காக இந்த மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
கேரளாவில் உலக ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., வினரை அழைப்பது ஹிந்து சொந்தங்களை இழிவுபடுத்துவதற்கு சமம்.
தமிழகத்தில் வன்முறை, கூலிப்படை கொலை, ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதில் தமிழகம் பூஜ்ஜியம் மதிப்பெண்ணை பெற்றுள்ளது, என்றார்.