sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேர்தலில் த.வெ.க.,வுக்கும் தி.மு.க.,வுக்கும் தான் போட்டி மதுரையில் அறிவித்தார் விஜய்

/

தேர்தலில் த.வெ.க.,வுக்கும் தி.மு.க.,வுக்கும் தான் போட்டி மதுரையில் அறிவித்தார் விஜய்

தேர்தலில் த.வெ.க.,வுக்கும் தி.மு.க.,வுக்கும் தான் போட்டி மதுரையில் அறிவித்தார் விஜய்

தேர்தலில் த.வெ.க.,வுக்கும் தி.மு.க.,வுக்கும் தான் போட்டி மதுரையில் அறிவித்தார் விஜய்


ADDED : ஆக 22, 2025 04:00 AM

Google News

ADDED : ஆக 22, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க., வுக்கும் தி.மு.க.,வுக்கும் மட்டும் தான் போட்டி இருக்கும். எங்களின் கொள்கை எதிரி பா.ஜ.,- ஒரே அரசியல் எதிரி தி.மு.க., தான்''என மதுரையில் நடந்த த.வெ.க., இரண்டாவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.

விஜய் பேசியதாவது:

தமிழகத்தில் 1967 லும் 1977 லும் மாற்றம் நடந்தது. அதைப்போல 2026 ல் த.வெ.க., வெற்றியின் மூலம் வரலாறு திரும்பும். அரசியலுக்கு வருவதற்கு முன்னால், 'அவரே வரலை, இவர் வருவாரா'என ஜோசியம் சொன்னார்கள். கட்சிக்கு பெயர் வைத்ததும் மக்களிடம் பேர் வாங்கமுடியாது என்றனர்.

இப்போது ஆட்சியை பிடிக்கிறது ஈசியில்லை; சூட்டிங் முடிச்சுட்டு வருகிறார் என்கின்றனர். கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா என்று கதை, திரைக்கதை சொல்கின்றனர். அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், லட்சம் பேர் இருக்கும் கூட்டத்தில் மட்டும் விஜய் இருக்கிறார் என தப்புக்கணக்கு போடவேண்டாம். இந்த கூட்டம் ஓட்டாக மட்டுமில்லை, நாளை ஆட்சியைப் பிடிக்க கோட்டைக்கு போகும் 'ரூட்டாகவும்' மாறும். நம் கணக்கு மக்களோடு மட்டும் தான். நாமும் மக்களும் எப்படி இருக்கிறோம் என அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரியும். பெண்கள், வயதானவர்களின் பாதுகாப்பு தான் முக்கியம்.

இளைஞர்கள், உழவர்கள், உழைப்பாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள், எல்லோருக்குமான அரசாக அமைப்பேன்.

ஆதாயம் நோக்கமல்ல த.வெ.க., கட்சி யைஅரசியல் ஆதாயத்திற்காக தொடங்கவில்லை; கொள்கை, கோட்பாடுக்காக தொடங்கப்பட்டது. நம் நிலையில் சமரசமின்றி உறுதியாக உள்ளோம். ஒரே கொள்கை எதிரி பா.ஜ., தான், ஒரே அரசியல் எதிரி தி.மு.க., தான்.

'அண்டர்கிரவுண்ட்' ஆதாயத்திற்காக 'டீல்' போடும் கட்சியல்ல நாம். கூட்டணி அமைத்து ஊரை ஏமாற்றும் கட்சியல்ல. பாசிச பா.ஜ., உடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணியுடன் உறவு வைக்க நாம் என்ன உலக மகா ஊழல் கட்சியா. எனவே அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கில்லை. இது சுயமிழந்த கூட்டணியல்ல, சுயமரியாதை கூட்டணி.

ஆர்.எஸ்.எஸ்.,க்கு அடிபணிந்து மக்களை மதச்சார்பற்ற கூட்டணி என்று எமாற்ற வேண்டியதில்லை. நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியும், அதிகாரமும் தரப்படும்.

இரு கட்சிக்கு தான் போட்டி 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., -த.வெ.க., வுக்கு இடையே தான் போட்டி. கூட்டணி வைத்து தப்பிக்கலாம் என்ற கணக்கு போடுபவர்களின் கனவு மெய்ப்படாது. எதிர்காலம் வரும்... என் கடமை வரும். மறைமுக உறவுகாரர்களான பாசிச பா.ஜ., -பாய்சன் தி.மு.க.,வுக்கு எதிராக மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுப்போம்.

பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியை கையில் வைத்துள்ளீர்கள். ஒட்டுமொத்த மக்களுக்கு நல்லது செய்யவா அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யவா. தமிழக மீனவர்கள் 800 பேர் தாக்கப்பட்டனர். தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள். தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது; அப்புறம் எப்படி தமிழக மக்கள் மனதில் ஒட்டும். ஒரு எம்.பி., சீட் கூட இல்லாததால் தமிழக மக்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறீர்கள்.

பொருந்தா கூட்டணி எம்.ஜி.ஆர்., இருந்தவரை முதல்வர் நாற்காலியைப் பற்றி யாருமே கனவு கூட காணவில்லை. எதிரியை கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர் எம்.ஜி.ஆர்.,

அவர் ஆரம்பித்த கட்சியை கட்டி காப்பது யார், இன்று அந்த கட்சி எப்படி இருக்கிறது, அக்கட்சியின் அப்பாவி தொண்டர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். அதனால் பொருந்தா கூட்டணியாக பா.ஜ., எந்த வேஷம் போட்டு வந்தாலும் தமிழகத்தை கைப்பற்ற முடியாது.

தி.மு.க., வெளியில் எதிர்ப்பது போல உள்ளுக்குள் உறவு வைத்து டிராமா போடுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது 'போங்க மோடி',ஆளும் கட்சியாக இருந்தால் 'வாங்க மோடி' என்று குடை பிடித்து கும்பிடு போடுகிறது.

ஸ்டாலின் அங்கிள்... வாட் அங்கிள்.. ரெய்டு வந்தால் இதுவரை போகாத டில்லி மீட்டிங்கிற்கு ஸ்டாலின் போகிறார். அப்புறம் அந்த பிரச்னை காணாமல் போய்விடும். ஸ்டாலின் அங்கிள்... வாட் அங்கிள்... ராங் அங்கிள்.

ஒரு தவறு செய்தால்... அதை தெரிந்து செய்தால்... கபட நாடக 'அங்கிளே', மனசாட்சி இருந்தால் பதில் சொல்லுங்க. நேர்மை, நியாயம், சட்டம் ஒழுங்கு உங்கள் ஆட்சியில் இருக்கா மை டியர் அங்கிள். டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழல் என்கின்றனர். உலகத்தில் 'மிஸ்டர் கிளீன்' விருது உங்கள் உடன் இருப்பவர்களுக்கு தான் தரவேண்டும்.

பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் கொடுத்தால் போதுமா, பிரச்னையை மூடி மறைக்கலாம் என நினைக்கிறார்களா. உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கதறுகின்றனர். உங்களை அப்பா என்று கூப்பிடுகிறார்களே, அந்த கதறல் கேட்கவில்லையா ஸ்டாலின் அங்கிள்... 'வொர்ஸ்ட் அங்கிள்' நீங்கள். ஆட்சியில் உள்ள ஸ்டாலின் அங்கிள் பதில் சொல்ல மாட்டார். நீங்கள் சொல்லுங்கள்... சொன்னதை செய்தார்களா... 'மை டியர் அங்கிள்'... கேட்குதா... இது சாதாரண முழக்கம் தான். அடுத்து இடிமுழக்கமாகி தமிழகத்தின் போர் முழக்கமாக மாறி உங்களைத் துாங்கவிடாது.

எல்லோரும் கட்சி ஆரம்பித்த பின் தான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போவாங்க. நாங்கள் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போன பின் தான் கட்சியே ஆரம்பித்துள்ளோம். கபட நாடக தி.மு.க, ஆட்சியை 2026 தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவோம். செய்வீர்களா நீங்கள் (தொண்டர்களை பார்த்து).

உங்கள் சின்னம் விஜய் முகம் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் உங்கள் விஜய் தான் வேட்பாளர். விஜய் முகம் தான் உங்கள் சின்னம். என் முகத்திற்காக ஓட்டு போட்டால் நம் வேட்பாளர்கள் ஜெயித்த மாதிரி. தமிழகத்தில் எல்லா சகோதரிகளுக்கும் நான் தாய்மாமன் தான். உங்கள் ரேஷன் கார்டில் என் பெயரில்லாமல் இருக்கலாம், எல்லோரும் ஒரே உறவு தான்.

சினிமாவில் மார்க்கெட் போன பின், ரிடையர்டாகி அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு எல்லாவற்றுக்கும் தயாராகி வந்துள்ளேன்.

அம்பேத்கர், காமராஜர், நல்லகண்ணுவை தோற்கடித்தது சினிமாக்காரன் அல்ல, அரசியல்வாதிகள் தான். எல்லா அரசியல்வாதிகளும் அறிவாளிகள் அல்ல, எல்லா சினிமாக்காரர்களும் முட்டாள்கள் அல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.

விஜய் 'பிராங்க்'

உங்களுக்கொரு 'சர்ப்ரைஸ்' தருகிறேன். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப் போகிறேன். மதுரை கிழக்கு வேட்பாளர் விஜய்' என்று விஜய் பேசியதும் தொண்டர்கள் ஆச்சரியத்தால் கோஷமிட்டனர். சில வினாடிகள் இடைவெளிக்கு பிறகு, 'மதுரை மேற்கு வேட்பாளர் விஜய்' என்றதும் தொண்டர்கள் குழம்பினர். பிறகு 'மதுரை தெற்கு, மதுரை மத்தி, உசிலம்பட்டி,சோழவந்தான் என 234 தொகுதிக்கும் விஜய் தான் வேட்பாளர்' என்று விஜய் சொன்னதும் 'ஓ... பிராங்க்' பண்ணிருக்காரு என்றனர் தொண்டர்கள்.



'மைண்ட் வாய்ஸ்'

விஜய் பேசியது: 30 ஆண்டுகளுக்கு மேலாக என்னைத் தாங்கி பிடிக்கிறீர்கள். அன்பு, ஆதரவு தரும் நீங்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம். எனக்காக நிற்கும் மக்களை நான் எப்படி மறப்பேன். எதிரிகளுக்கு இது தான் பற்றி எரிகிறது. மக்களை மதிக்கிறேன், வழிபடுகிறேன். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த நன்றிக்கடனை என்னால் முழுமையாக செலுத்தமுடியாது. அப்புறம் என்ன... 'ம... னவுக்கு', மைண்ட் வாய்ஸ்... கேட்ட மாதிரி இருக்கு, மக்களுக்காக வாழ்நாள் முழுக்க உழைப்பதை தவிர வேறெந்த எண்ணமும் இல்லை, வேறு எந்த வேலையும் இல்லை என்றார். ம... என்று அவர் கை காட்டியது அவரது தலைமுடியை.








      Dinamalar
      Follow us