/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிராம உதவியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்
/
கிராம உதவியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்
ADDED : டிச 10, 2025 05:44 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்க வட்டக்கிளை சார்பில் அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்க கோரியும், கல்வி தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் உதவியாளர்களுக்கு பணி நியமனம் வழங்குதல், வருவாய்த் துறை காலி பணியிடங்களில் 50 சதவீதம் கிராம உதவியாளர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு கோஷமிட்டனர்.
ரத்த கையெழுத்து இயக்கத்திற்கு கிளை தலைவர் முருகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜோதி முருகன், கிளைச் செயலாளர் அழகுபாண்டி முன்னிலை வகித்தனர். ஓய்வூதியர் சங்க செயலாளர் வேல்மயில், மாநில இணைச் செயலாளர் வளர்மதி கோரிக்கைகளை விளக்கினர். பொருளாளர் ஜெகதீசன் துவக்கி வைத்தார். ஏராளமான கிராம உதவியாளர்கள் ரத்தத்தில் கையெழுத்திட்டனர். நிர்வாகி ரமா நன்றி கூறினார்.

