/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து மறியல்
/
கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து மறியல்
ADDED : ஜன 27, 2025 04:52 AM
திருமங்கலம் : திருமங்கலம் ராஜபாளையம் ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தற்போது நடக்கிறது. ஆலம்பட்டி அருகே சேடப்பட்டி பிரிவில் வாகனங்கள் கடந்து செல்ல அண்டர் பாஸ் பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலம் ஆலம்பட்டி கிராமத்தின் நடுவே செல்கிறது.
நான்கு வழி சாலை அமைந்தபின் ரோட்டை கடப்பது ஆபத்தாக இருக்கும். எனவே ஆலம்பட்டியிலும் ஒரு அண்டர் பாஸ் அமைக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அந்த பகுதியில் பள்ளி செல்லும் குழந்தைகள் ரோட்டை கடந்து செல்லும்போது கீழே விழுந்து காயமடைகின்றனர். இதனால் பாலம் அமைக்க வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க மக்கள் முடிவு செய்திருந்தனர்.
நேற்று கிராமசபை நடக்க இருந்த நிலையில், பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து, கூட்டத்தை புறக்கணித்து, சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கும் வரை கிராம சபை கூட்டம் உள்பட எல்லா கூட்டங்களையும் புறக்கணிப்பது என முடிவு செய்தனர்.