/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இரண்டு வாரங்களாக இருளில் மூழ்கிய கிராமம்
/
இரண்டு வாரங்களாக இருளில் மூழ்கிய கிராமம்
ADDED : ஜூலை 25, 2025 03:36 AM

மேலுார்: முத்துச்சாமி பட்டி தெற்குப்பட்டி பகுதியில் மின்தடை ஏற்பட்டு கிராமம் முழுவதும் இருளில் மூழ்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
செமினிபட்டி ஊராட்சி முத்துசாமி பட்டி- தெற்கு பட்டி பகுதியில் 250க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் நிறுவிய டிரான்ஸ்பார்மரில் குடியிருப்புகள், மூன்றுமேல்நிலைத் தொட்டிகள், விவசாய மோட்டார்கள் துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 14 நாட்களாக இரவு முழுவதும் மின் சப்ளை துண்டிக்கப்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அப்பகுதி அப்பாஸ் கூறியதாவது : இரவில் மின்வினியோகம் இன்றி துாங்க முடியவில்லை. மாணவர்கள், வேலைக்கு செல்வோரை குறித்த நேரத்திற்கு அனுப்ப முடியவில்லை. மேல்நிலை தொட்டியில் தண்ணீர் ஏற்றாததால் வினியோகிக்கவில்லை. அதனால் குடம் தண்ணீரை ரூ.15க்கு வாங்குகிறோம். தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வருகிறது. ஊராட்சி நிர்வாகம் மின்வாரியத்தில் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. கிராமமே இருளில் மூழ்கி கிடப்பதால் பலரும் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறோம். தடையின்றி மின்சாரம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சந்திரன் கூறுகையில், உடனடியாக பழுது நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

