நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட வஞ்சிநகரம்,பூதமங்கலம், கொடுக்கம்பட்டி பகுதிகளில் சிப்காட் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த 200க்கும் மேற்பட்டோர் வேனில் புறப்பட்டனர்.
போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
மக்கள் நான்கு வழிச் சாலைக்கு நடந்து செல்லவே வேனில் செல்ல போலீசார் அனுமதி அளித்து, பின்னர் நான்கு வழிச்சாலையில் தடுத்து கைது செய்தனர்.