/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அசுவமாநதியின் குறுக்கே பாலம் கிராமத்தினர் வலியுறுத்தல்
/
அசுவமாநதியின் குறுக்கே பாலம் கிராமத்தினர் வலியுறுத்தல்
அசுவமாநதியின் குறுக்கே பாலம் கிராமத்தினர் வலியுறுத்தல்
அசுவமாநதியின் குறுக்கே பாலம் கிராமத்தினர் வலியுறுத்தல்
ADDED : அக் 28, 2024 04:58 AM

உசிலம்பட்டி : 'உசிலம்பட்டி செட்டியபட்டி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் அசுவமாநதியின் வழியில் முத்துப்பாண்டிப்பட்டியையும், சடையாண்டிபட்டியையும் இணைக்கும் ரோட்டுக்கு குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும்' என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உசிலம்பட்டி பகுதி கண்மாய்களான கருக்கட்டான்பட்டி, உசிலம்பட்டி, மாதரை, நல்லுத்தேவன்பட்டி, வகுரணி, புத்துார், வாலாந்துார் கண்மாய்களுக்கான நீராதாரமாக உள்ளது அசுவமாநதி.
இந்தாண்டு தொடர் மழையால் அசுவமாநதி தடுப்பணை நிரம்பி தொடர்ந்து 3 நாளாக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கருக்கட்டான்பட்டி, மாதரை, நல்லுத்தேவன்பட்டி கண்மாய்களின் நீர்மட்டம் கணிசமாக நிரம்பிவருகிறது.
முத்துப்பாண்டிபட்டியில் இருந்து மலையடிவாரத்தில் சடையாண்டிபட்டி, கிருஷ்ணாபுரம், அம்பாசமுத்திரம்புதுார், இடையபட்டி வழியாக தொட்டப்பநாயக்கனுார் செல்லும் ரோடு புதிதாக அமைக்கப்படுகிறது.
முத்துப்பாண்டிபட்டி ராஜேந்திரன் கூறியதாவது: கிராமத்தினர் தோட்டங்களுக்குச் செல்ல இந்த சடையாண்டிபட்டி இணைப்பு ரோடு அமைக்கப்படுகிறது.
இதில் அசுவமாநதி குறுக்கிடும் பகுதியில் பாலம் அமைக்காததால் மழைக்காலம் இந்த ரோட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் அமைக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றார்.