/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மாணவர்கள் விடுதிகளில் தொடரும் விதிமீறல்கள்; கண்காணிப்பும் கேள்விக்குறி மாணவர் நிர்வாண வீடியோ விவகாரத்தால் அம்பலம்
/
அரசு மாணவர்கள் விடுதிகளில் தொடரும் விதிமீறல்கள்; கண்காணிப்பும் கேள்விக்குறி மாணவர் நிர்வாண வீடியோ விவகாரத்தால் அம்பலம்
அரசு மாணவர்கள் விடுதிகளில் தொடரும் விதிமீறல்கள்; கண்காணிப்பும் கேள்விக்குறி மாணவர் நிர்வாண வீடியோ விவகாரத்தால் அம்பலம்
அரசு மாணவர்கள் விடுதிகளில் தொடரும் விதிமீறல்கள்; கண்காணிப்பும் கேள்விக்குறி மாணவர் நிர்வாண வீடியோ விவகாரத்தால் அம்பலம்
ADDED : செப் 25, 2025 03:17 AM
மதுரை : தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி செயல்படும் அரசு விடுதிகளுக்கு ரூ. பல கோடி நிதி ஒதுக்கியும் போதிய பாதுகாப்பு இல்லை; விதிமீறல்கள் தொடர்கின்றன. இதன் வெளிப்பாடு தான் மதுரை அருகே ஒரு விடுதியில் தங்கியிருந்த ஜூனியர் மாணவரை, சீனியர் மாணவர்கள் நிர்வாணமாக வீடியோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் வைரலாக்கியது என சர்ச்சை எழுந்துள்ளது.
மாநிலத்தில் அரசு பள்ளி, கல்லுாரி விடுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறையில் 98,909, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையில் (கள்ளர் சீரமைப்பு உட்பட) 41,194, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 26,653, டி.என்.சி., விடுதிகளில் 9,372, சிறுபான்மை பிரிவில் 1250, பழங்குடியினர் பிரிவில் 2190 என மாணவர்கள் தங்கி படிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தாண்டு அனைத்து விடுதியிலும் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. இருப்பினும் 80 சதவீதம் மாணவர் தங்கி படிக்கின்றனர்.
இவர்களுக்கு உணவுச் செலவாக ஒரு மாணவருக்கு மாதம் தலா ரூ.1400 (பள்ளி), ரூ.1500 (கல்லுாரி) என வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கேற்ப பல இடங்களில் உணவு வழங்கப்படுவதில்லை. இரவு காவலர் இல்லை. காப்பாளர்கள் இரவில் விடுதியில் தங்குவதில்லை.
ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் 5 கிலோ மீட்டருக்குக்குள், பி.சி., விடுதிகளில் 8 கிலோ மீட்டருக்குள் வீடுகள் இருந்தால் மாணவரை சேர்க்க கூடாது. ஆனால் பெரும்பாலும் விடுதிகளில் இந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை. குறிப்பாக கள்ளர் சீரமைப்புத்துறை விடுதிகளில் இரவில் மாணவர்கள் வீடுகளுக்கு சென்று விடுவதால் 20க்கும் மேற்பட்ட விடுதிகள் இரவில் மூடப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுபோன்ற விதிமீறல்களும், காப்பாளர்கள் இல்லாததால் சில விடுதிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலும் நிலவுகிறது.
பயோமெட்ரிக் வருகை வேண்டும் விடுதிக் காப்பாளர்கள் கூறியதாவது: ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் மட்டும் தற்போது மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை உள்ளது.
இதனை அனைத்து விடுதிகளிலும் பின்பற்ற வேண்டும். தரமான பயோ மெட்ரிக் உபகரணங்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். இரவில் காப்பாளர்கள் விடுதிகளில் தங்குகிறார்களா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கை விதிமீறல்களை ஆய்வு செய்ய வேண்டும். இரவு காவலர் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மாணவர் விடுதிகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லையென்றால் மதுரை அருகே செக்கானுாரணி கள்ளர் விடுதியில் மாணவரை நிர்வாணமாக வீடியோ எடுத்த சம்பவம் போல் இன்னும் பல சர்ச்சைகள் அரசு விடுதிகளை சூழத்தான் செய்யும் என்றனர்.