ADDED : ஜூலை 07, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி பழைய பஸ்ஸ்டாண்ட் எதிரே மதுரை செல்லும் ரோட்டில் கண்மாய் கரையில் பூக்கடைகள் வைத்துள்ளனர்.
நேற்று காலையில் கடையை திறந்த போது பாம்பு இருப்பதைப் பார்த்து, போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவா தலைமையில் வீரர்கள் பூக்கடைக்குள் பதுங்கி இருந்த 5 அடி நீள வீரிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர். வனத்துறை உதவியுடன் மீட்ட பாம்பை வனப்பகுதியில் விடுவித்தனர்.