/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆஸ்திக பிரசார சபா சார்பில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்
/
ஆஸ்திக பிரசார சபா சார்பில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்
ஆஸ்திக பிரசார சபா சார்பில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்
ஆஸ்திக பிரசார சபா சார்பில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்
ADDED : டிச 08, 2024 04:54 AM
மதுரை பிராமணர் இளைஞர் சங்க ஆஸ்திக பிரசார சபா சார்பில் 60 ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு பாராயணம் மேலமாசி வீதி ஐயப்பன் கோயில் எதிரில் சம்பந்த மூர்த்தி தெரு அலுவலகத்தில் டிச.16ல் துவங்குகிறது. 41 நாட்களுக்கு தினமும் மாலை 5:00 மணிக்கு நடக்கும் பாராயணத்தில் ஜன.11ல் கூடாரை வெல்லும் சீர் விழாவும், ஜன.15 காலை 9:00 மணிக்கு கோபூஜையும், ஜன.19 மதியம் 3:00 மணிக்கு 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு விஷ்ணு சகஸ்ரநாம போட்டியும் நடக்கிறது. கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும். ஜன.26 காலை 8:00 மணிக்கு பேச்சியம்மன் படித்துறை காயத்ரி கல்யாண மண்டபத்தில் லட்சார்ச்சனையுடன் விழா நிறைவு பெறுகிறது. பக்தர்கள் பங்கேற்று பாராயணம் செய்யலாம் என ஆஸ்திக பிரசார சபா அறிவித்துள்ளது.