நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தேசிய தொழிலாளர் தினத்தையொட்டி விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
பா.ஜ., நகர் தலைவர் மகாசுசீந்திரன் தலைமை வகித்தார். இதில் ஏழை கூலித்தொழிலாளர்களுக்கு அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் நரசிங்கம் அருண் தொழில் உபகரணங்கள் வழங்கினார். இதில் ஆட்டோ, கட்டுமான, தையல், சலவை, சாலையோர வியாபாரம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். அவர்களை பா.ஜ., உறுப்பினராக்கினர்.