ADDED : ஆக 09, 2025 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப் பள்ளத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
இங்குள்ள ஊராட்சி அலுவலகம் அருகே 15 வது நிதிக்குழு மானியம் 2020-21 திட்டத்தில்ரூ. 5 லட்சம் மதிப்பில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சுகாதார வளாகம் கட்டி பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் இன்றுவரை திறந்த வெளியையே பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து ஊராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, 'மக்கள் எளிதாக சென்று வருவதற்கு பாதை அமைக்க வேண்டியுள்ளது. தண்ணீர் இணைப்பு வழங்க வேண்டியுள்ளது.
இரண்டு வேலைகளும் முடிந்தவுடன் திறக்கப்படும்' என்றார்.