ADDED : ஜூலை 05, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை கல்லுாரி மேல்நிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் பாலாஜி ராம் தலைமை வகித்தார். நேதாஜி சுவாமிநாதன், மதுரை காஸ்மாஸ் அரிமா சங்கத்தலைவர் ராஜேஷ் கண்ணன், ரத்தீஷ்பாபு மாலை அணிவித்தனர். ஜெயபிரகாசம், பேராசிரியர் முருகேசன், வர்ம மருத்துவர் கருணாகரன், வழக்கறிஞர் ஆறுமுகம், சமூக சேவையாளர் ராமச்சந்திரன், காஸ்மாஸ் அரிமா சங்க செயலாளர் கருணாநிதி, ஆன்மிக சேவையாளர்கள் செல்வம், செந்தில் முருகன், நுகர்வோர் அமைப்பு நிர்வாகி கர்ணன் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு விவேகானந்தர் பொன்மொழி கேடயம் வழங்கப்பட்டது. பள்ளித் தமிழாசிரியர் சிவா நன்றி கூறினார். ஏற்பாடுகளை நேதாஜி தேசிய இயக்கம் செய்திருந்தது.