
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை விருதுநகர் மாணிக்கம் நாடார் ஜானகி அம்மாள் பள்ளியில், 49வது ஆண்டுவிழா, செயலாளர் திவ்யன் தயாளன் தலைமையில் நேற்று(ஜன.,26) நடந்தது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, வி.என்.எம்.ஏ.டி. நிர்வாக பங்குதாரர் பாலமுருகன், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கும், பரிசு வழங்கினார்.
பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு, இஸ்ரோ முன்னாள் குழு தலைவர் ஜெயந்தி பரிசு வழங்கினார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவர்களின் திறமைகள் வெளி கொண்டுவரப்பட்டது. பள்ளி முதல்வர் செந்தில் நாயகி நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள், ராஜ்குமார், முத்துசாமி, கந்தசாமி, அஜய் தீபக், காளிசரண் ஆகியோர் மேற்கொண்டனர்.

