ADDED : செப் 06, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு வ.உ.சி.சமூக நலப்பேரவை சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. மதுரை ஆதினம், பேரவை செயலாளர் ராமசுப்பிரமணியன், துணை செயலாரள் காளீஸ்வரன், செயற்குழு உறுப்பினர்கள் ஹரிஹரன், சண்முக சுந்தரம், ஜெயசீலன், சுப்பிரமணியன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வ.உ.சி., பெயரில் விருது வழங்கப்பட வேண்டும், அவரது பிறந்த நாளை தமிழ் திருவிழாவாக உலக தமிழ்ச்சங்கத்தில் கொண்டாட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

