ADDED : செப் 09, 2025 04:22 AM
மதுரை: மதுரை புதுார் தொழிற்பேட்டையின், எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில், இளைஞர்களுக்கான பல்வேறு தொழிற் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
செப். 19 முதல் 21 வரை இருபாலருக்குமான சிறு ரசாயன பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. வாசிங் பவுடர், கம்ப்யூட்டர் சாம்பிராணி, பெயின் பாம், முக பவுடர், டாய்லெட் கிளீனர் லிக்யூட், துணிகள் வாசிங் லிக்யூட், டிஷ் வாஷ் லிக்யூட், தரை கிளீனிங் லிக்யூட், பினாயில், லிக்யூட் சோப், துணிகளை துவைத்த பின் போடும் கண்டிஷனர் தயாரிப்பது குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் ரூ.1000.
செப். 15 முதல் அக். 3 வரை வார நாட்களில் மட்டும்பெண்களுக்கானஅடிப்படை தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. பலவகையான தையல் மெஷின்கள் பற்றிய அறிமுகம், வெவ்வேறு விதமான தையல் வகைகள், சுடிதார், ஜாக்கெட், பாவாடை, சிறுவர்களுக்கான ஆடைகள் தைப்பது குறித்து கற்றுக் கொடுக்கப்படுகிறது. கட்டணம் ரூ.3540.
காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கும் பயிற்சிகளில்10ம் வகுப்பு படித்த 18 வயதுக்கு மேற்பட்டோர் சேரலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். விவரங்கள், முன்பதிவுக்கு 86956 46417ல் தொடர்பு கொள்ளலாம்.