ADDED : ஆக 20, 2026 01:08 AM

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை 'பி' மண்டல கல்லுாரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டிகள் செந்தாமரைக் கல்லுாரியில் நடந்தது.
ஒன்பது கல்லுாரி அணிகள் பங்கேற்றன. முதல்வர் செந்துார் பாண்டி துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குநர்கள் கதிர்வேல் பாண்டியன், ராகவன், ஜெயபால், யுவராஜ், நிரந்தன், கவுதம், குமார், ராஜ்குமார் பங்கேற்றனர்.
முதல் போட்டியில் செந்தாமரை கல்லுாரி 25 - 15, 25 - 13 செட்களில் மன்னர் கல்லுாரியை வீழ்த்தியது. காலிறுதிப் போட்டியில் செந்தாமரை கல்லுாரி 25 - 16, 25 - 19 செட்களில் விவேகானந்தா கல்லுாரியையும் அரையிறுதிப் போட்டியில் 25 --21, 25 - 21 செட்களில் மதுரைக் கல்லுாரியை வீழ்த்தியது. இறுதிப்போட்டியில் செந்தாமரை கல்லுாரி 25 - 21, 25 - 16 செட்களில் வத்தலக்குண்டு கே.பி. நேஷனல் கல்லுாரியை வீழ்த்தி கோப்பை வென்றது.
தாளாளர் இளங்கோவன், துணைமுதல்வர் செந்தில்குமார், பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் வசந்தகுமார் பரிசு வழங்கினர். உடற்கல்வி இயக்குநர்கள் கவிக்குமார், ஜெயத்தங்கம், பயிற்சியாளர் தீபன்ராஜ் ஏற்பாடுகளைச் செய்தனர்.
