ADDED : நவ 19, 2024 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கிடாரிபட்டி லதாமாதவன் கல்வி நிறுவனம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கான மாநில வாலிபால் போட்டி நடந்தது.
இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் சேலம் பாரதியார் மேல்நிலை பள்ளி, ஈரோடு குமுதா மெட்ரிக் பள்ளி, சேலம் பாரதியார் மெட்ரிக் பள்ளியினர் முதல் மூன்று இடங்களை வென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு லதாமாதவன் நிறுவனங்களின் சேர்மன் மாதவன், இயக்குநர் தினேஷ், இணைச் செயலாளர் ஜெகன், வல்லாளபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன் ஆகியோர் கேடயம் வழங்கினர். செயல் அலுவலர்கள் காந்திநாதன், பிரபாகரன், மீனாட்சி சுந்தரம், முதல்வர்கள் சரவணன், தவமணி, புவனேஸ்வரி, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர் முருகன் நன்றி கூறினார்.