ADDED : ஜன 06, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஊக்குவிப்பு முகாம் நடந்தது.
மாவட்ட தொழில்மைய புலனாய்வாளர் பாண்டியராஜா, உதவி வேளாண் அலுவலர் பாண்டியன் தலைமை வகித்தனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு இ சேவை மையம் துவங்க தேவையான ஆவணங்கள், விண்ணப்பித்தல் மற்றும் சந்தேகங்கள் எடுத்துரைக்கப்பட்டது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சாமுவேல், எபினேசர், நாகராஜன், கண்ணன் பங்கேற்றனர்.