/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகை ஆறு வளம் மீட்பு திட்டப் பணி விளக்க கூட்டம்
/
வைகை ஆறு வளம் மீட்பு திட்டப் பணி விளக்க கூட்டம்
ADDED : ஜன 09, 2024 06:05 AM
மதுரை : மதுரையில் வைகை ஆறு வளம் மீட்பு திட்ட களப் பணிகள் குறித்த விளக்க கூட்டம் ஒருங்கிணைப்பாளர் குருசாமி, பிரபாகரன், நவீன், கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.
தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம், தஞ்சை கடைமடை பகுதி விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய இக்கூட்டத்திற்கு வைகை திட்டப் பொறுப்பாளர்கள் ஆண்டிபட்டி பாண்டி, பெரியகுளம் நாகராஜன், தேவாரம் பெருமாள்,ஓசை கஸ்துாரி, போடி அன்புச்செல்வி, திண்டுக்கல் ராஜாமுகமது, கூடலிங்கம், நீர்நிலைகள் அமைப்பு நிறுவனர் அபுபக்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பிப்.,1 முதல் களப்பணிகளை துவங்குவது, நீர்க்கருவேலம், ஆகாயத்தாமரை பிற அயல் இனத்தாவரங்களை வேருடன் அகற்றுவது, ஆற்றினுள் நீரோட்டத்தை தடைசெய்யும் தேவையற்ற தடுப்புக்களை நீக்குவது, வரத்து நீர் வழித்தடங்களை சீரமைத்தல், 10 கட்டங்களாக பணிகளை மேற்கொள்வது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.