/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காலமெல்லாம் காத்திருந்து: காலமானவர்களின் உடல்களை பெற 'மார்ச்சுவரி'யில் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி தேவை

ADDED : ஜன 10, 2025 05:27 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை மார்ச்சுவரி வளாகத்தில் உட்கார வசதியின்றி இறந்தோரின் உறவினர்கள் மணிக்கணக்கில் நிற்க வேண்டியுள்ளதால் அவதிப்படுகின்றனர்.
விபத்து, தற்கொலையால் இறப்போரின் உடல், அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படும். மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்களில் விபத்தில் அடிபட்டு இங்கு வந்து இறப்போர் அதிகம். தற்கொலை, சந்தேக மரணம் உட்பட தினமும் 20 முதல் 24 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றன.
காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை இது நடைபெறும் என்றாலும், எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் காலை 9:00 மணி முதலே உறவினர்கள் 'மார்ச்சுவரி' அருகே காத்திருக்கின்றனர். உடலைப் பெற்றுச் செல்ல குறைந்தது மதியம் 12:00 மணியாகி விடும். அதுவரை சுகாதாரமற்ற தரையில் உட்கார்ந்திருக்கின்றனர். நிழல்கூரையும் இல்லாததால் சிறு மரங்களின் நிழலுக்குள் குவிந்து நிற்கின்றனர். ஆம்புலன்ஸ் ஒவ்வொரு முறை வரும் போது தரையில் உட்கார்ந்திருப்போர் எழுந்து நிற்க வேண்டியுள்ளது.
தேவை அடிப்படை வசதிகள்
சுற்றுச் சுவரையொட்டிய இடத்தில் மூன்று வரிசைகளில் நீளமான சிமென்ட் இருக்கைகள் அமைப்பதோடு, கூரையும் அமைக்க வேண்டும். அருகிலேயே குடிநீர் குழாயும் அமைத்தால் நல்லது.
ஒன்றிரண்டு தனியார் நிறுவனங்களிடம் சி.எஸ்.ஆர்., நிதி கேட்டுள்ளோம். பணமாக கொடுப்பதற்கு பதிலாக இருக்கைகள், கூரை, குடிநீர் வசதி செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் அனைத்து வசதிகளும் செய்யப்படும்.
அருள் சுந்தரேஷ்குமார்டீன்