/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதய்யா நெல் விவசாயிகள் ஏக்கம்

ADDED : ஜூலை 21, 2025 03:03 AM

மேலுார்: அட்டப்பட்டியில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
அட்டப்பட்டி, தும்பை பட்டி, கொடுக்கம்பட்டி கிராமங்களில் கோடை சாகுபடி 15 ஆயிரம் நெல் மூடைகள் அறுவடை செய்யப்படும். ்நெல்லை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் அட்டப்பட்டியில் மையம் அமைத்து கொள்முதல் செய்வர். இந்தாண்டும் விவசாயிகள் வேளாண் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து நெல் கொள்முதல் மையம் துவங்க 15 நாட்களுக்கு முன் மனு கொடுத்தனர். அதிகாரிகள் விரைவில் மையம் துவங்கப்படும் என்றதால், பலஆயிரம் நெல்மூடைகளை திறந்த வெளியில் குவித்து வைத்துள்ளனர். ஆனால் இதுவரை நெல் கொள்முதல் செய்யவில்லை.
விவசாயி ராஜேஸ்வரன் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து நெல் விளைவித்தோம். அறுவடை செய்து கொள்முதல் மையத்தில் குவித்து 8 நாட்களுக்கும் மேலாகிறது. இதுவரை கொள்முதல் செய்யாததால் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாவதுடன், நெல் எடையும் குறைகிறது. நெல்லை காலம்கடந்து அறுவடை செய்தால் அரிசி குருணையாக உடையும் என்பதால் அதிகாரிகள் விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.