ADDED : ஜன 29, 2026 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதிகளுடன் அலுவலகம், டி.என்.பி.எஸ்.சி., நேரடி நியமன முறையில் கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க வேண்டும், பதவி உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். கிளைத் தலைவர் முருகன், செயலாளர் வி.முருகன், பொருளாளர் முத்துமணி, உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு கிளைத் தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். நிர்வாகி பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரசன்னா பேசினார்.

