/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பற்களால் சைக்கிளை துாக்கி நடந்து சாதனை
/
பற்களால் சைக்கிளை துாக்கி நடந்து சாதனை
ADDED : நவ 25, 2025 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: சிவரக்கோட்டை முன்னாள் ராணுவ வீரர் ஆனந்தகுமார் 45. பள்ளி மாணவ மாணவிகளுக்கு யோகா, சிலம்பாட்டம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை இலவசமாக கற்றுத்தருகிறார். சிறு வயது முதலே பற்களால் சைக்கிளை துாக்கி நின்றவாறு சாகச முயற்சியில் ஈடுபட்டார்.
தற்போது 25 கிலோ எடை கொண்ட சைக்கிளை பற்களால் துாக்கியபடி 100 மீட்டர் துாரம் நடந்து சென்று சாதனை படைத்தார். அடுத்து 200 மீட்டர் துாரம் வரை சைக்கிளை துாக்கிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

