/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நடையிலோ செயலிலோ தடுமாற்றமா பக்கவாதமாக இருக்கலாம் என எச்சரிக்கை
/
நடையிலோ செயலிலோ தடுமாற்றமா பக்கவாதமாக இருக்கலாம் என எச்சரிக்கை
நடையிலோ செயலிலோ தடுமாற்றமா பக்கவாதமாக இருக்கலாம் என எச்சரிக்கை
நடையிலோ செயலிலோ தடுமாற்றமா பக்கவாதமாக இருக்கலாம் என எச்சரிக்கை
ADDED : டிச 08, 2024 05:13 AM

மதுரை, : பேச்சு, செயல், நடையில் தடுமாற்றம் இருந்தால்பக்கவாதமாக இருக்கலாம்என மதுரையில் அப்போலோ மருத்துவமனை சார்பில் நடந்த நரம்பு மண்டலம் தொடர்பான தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
அவசர சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் ஜூடு வினோத் பேசியதாவது:
ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் (த்ராம்போலைசிஸ்) ஏற்பட்ட நோயாளிகளை 4 மணி நேரத்திற்குள்ளாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் உடனடியாக மருந்தை செலுத்துவதன் மூலம் மூளையின் செயல்பாட்டு குறைவை நீக்கி முழுமையாக குணப்படுத்தலாம். முழுமையான சிகிச்சைக்கு நேரம் என்பது தான் முக்கியம்.
மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்ட ஒவ்வொரு நொடியிலும் 1.9 மில்லியன் நியூரான்களை இழந்து கொண்டிருக்கிறோம். 4 மணி நேரத்திற்குள் சி.டி.ஸ்கேன் வசதி, நரம்பியல் நிபுணர், அவசர சிகிச்சை நிபுணர், இன்டர்வென்ஷனல் நியூரோ ரேடியோலாஜிஸ்ட் குழு இருக்கும்மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச்செல்வதே நல்லது. பொதுமக்கள் இதுகுறித்து விழிப்புணர்வு பெற வேண்டும்.
ஒருபக்கம் கை, கால் செயலிழப்பை தான் பக்கவாதம் என்று சொல்லிகொண்டிருக்கிறோம். இது தீவிரமான நோயின் அறிகுறி. இப்படித்தான் வரவேண்டும் என்று கட்டாயமில்லை. ஆரம்பகட்ட அறிகுறிகளை வைத்தும் கண்டறியலாம். காலையில் எழும் போது வாய் கோணிய படி இருந்தலோ, பேச்சு குளறினாலோ, தலை சீவும் போது, நடையில் தடுமாற்றம் ஏற்படலாம். அது பக்கவாதமாக தான் வரவேண்டும் என்ற அவசியமில்லை. இதில் ஏதாவதுஒரு தொந்தரவு ஏற்பட்டால்உடனடியாக சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும்.
பொது மருத்துவ நிபுணரை அணுகுவதை விட சிறப்பு நிபுணரை அணுகுவதே நல்லது. முக அமைப்பில் ஏற்படும் மாறுதல், பேச்சு, நடையில் ஏற்படும் மாறுதலைசாதாரண பலவீனம் என்று அலட்சியப்படுத்த வேண்டாம் என்றார்.
கருத்தரங்க அமர்வுகளில் டாக்டர்கள் மதன் ராஜா, ஜான் ராபர்ட், கார்த்திகேயன், அமரேஷ்வர் ரெட்டி, ராதா மாதவன்,முருகன், வாணி, மகேந்திரசேகர், வெங்கடாசலபதி உட்பட பலர் பேசினர். டாக்டர்கள் மீனாட்சிசுந்தரம், கார்த்திக், சுரேஷ், சுந்தரராஜன், ஷியாம், கெவின் ஜோசப், நிஷா ஒருங்கிணைத்தனர். சி.ஓ.ஓ. நீலகண்டன், மருத்துவப்பிரிவு இணை இயக்குநர் பிரவீன் ராஜன் ஏற்பாடுகளை செய்தனர்.