ADDED : மார் 17, 2026 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஜம்முகாஷ்மீர் தாக் கிராமத்தைச் சேர்ந்தவர் மத்திய ரிசர்வ் படை வீரர் ரியாஷ் அகமது 45.
தேர்தல் பணிக்காக நேற்று முன்தினம் மதுரை வந்து தனியார் பள்ளியில் தங்கியிருந்தார். நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சக வீரர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
'ஆஞ்சியோகிராம்' பரிசோதனை இன்று (மார்ச் 17) செய்யப்பட உள்ளது. கமிஷனர் லோகநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

