/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கலைப் பொருளாகும் கழிவுப் பொருட்கள்
/
கலைப் பொருளாகும் கழிவுப் பொருட்கள்
ADDED : அக் 10, 2025 03:06 AM

மதுரை: மதுரைக் கோட்ட ரயில்வே அலுவலக வளாகத்தில், வீணாகும் கழிவுப் பொருட்கள் மூலம் ஊழியர்கள் உருவாக்கிய கோயில் கோபுர மாதிரி, பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம் சார்பில் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கழிவுப் பொருள் மேலாண்மை, ரயில்வே வளாகங்களை அழகுபடுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பயன்பாடின்றி வீணாக கிடக்கும் கழிவுப் பொருட்களை, கலைப் பொருட்களாக மாற்றி அலுவலகங்களை ஊழியர்கள் அழகுபடுத்தி வருகின்றனர். மதுரை ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை ஊழியர்கள், தகடுகள், நீண்ட குழாய்கள், போல்ட், நட்டுகள், தண்டவாள துண்டுகள் உள்ளிட்ட இரும்பு பொருட்களை கொண்டு 12 அடி உயர கோயில் கோபுர மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
ஊழியர்கள் ரமேஷ், அருண்குமார், கண்ணன், ஜெரால்ட் ஆண்ட்ரூஸ், பினாய் குமார், ஜஸ்டின் பீட்டர், லட்சுமணன், சண்முக பாண்டி, இசக்கி ராஜா, தாமஸ், ரூபேஷ், விகாஸ் குமார் குப்தா, குருமூர்த்தி ஆகியோர் பத்து நாட்களில் இதனை உருவாக்கினர். இக்கலை பொருள், ஊழியர்களின் திறமை, கூட்டு முயற்சி, அர்ப்பணிப்பு, நிறுவனத்தில் உள்ள வளத்தை பலமாக்கும் பண்பு ஆகியவற்றுக்குச் சான்றாக திகழ்கிறது.