/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீணாகும் குடிநீர்; சகதியாகும் ரோடு
/
வீணாகும் குடிநீர்; சகதியாகும் ரோடு
ADDED : ஏப் 22, 2025 06:13 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே ஊத்துக்குளியில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீரால் சாலை சேறும்,சகதியுமாக மாறி உள்ளது.
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில சில மாதங்களுக்கு முன் இக்கிராமத்தில் ரோட்டின் இருபுறமும் குழி தோண்டி குழாய்கள் பதித்து மூடினர். இதனால் ரோடு கரடு முரடானது. இந்நிலையில் சில வாரங்களாக பதிக்கப்பட்ட குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் ரோடு முழுவதும் மேடு பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக மாறி போக்குவரத்து பாதிக்கிறது. இந்த ரோட்டில் அறுவடை விவசாய பணிகளுக்கு என அதிக வாகனங்கள் சென்று வரும். குழாய் உடைப்பை சீரமைக்க புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.