ADDED : மார் 22, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் - டி.கல்லுப்பட்டி சாலையில் கொண்டு ரெட்டிபட்டி எதிரே வைகை கூட்டுக் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
இதை அவ்வழியாக செல்லும் அதிகாரிகள் கூட ஏனோ கண்டுகொள்ளவில்லை. உடைப்பெடுத்த குழாயை சீரமைக்க முயற்சி எடுக்காததால் நாளாக நாளாக உடைப்பு பெரிதாகி ஓராண்டாக அதிகளவில் குடிநீர் வெளியேறுகிறது. வெளியேறும் தண்ணீரில் தெரு நாய்கள் குளித்து ஆட்டம் போடுகின்றன.
இதில் தவளைகள் அதிக அளவில் இருப்பதால் சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் தவளைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. சேதமடைந்த குழாய்களை அகற்றி புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.