/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் கழிவு நீர்
/
மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் கழிவு நீர்
ADDED : ஜூலை 30, 2025 06:51 AM

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ராஜீவ்காந்தி நகர் பகுதி கால்வாயில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
திருப்பரங்குன்றம் ஒரு பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அவனியாபுரம் பிரிவு ரோட்டிலுள்ள கால்வாய்கள் வழியாக செல்கிறது. ராஜீவ் காந்தி நகரில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும் கால்வாய் இக்கால்வாயுடன் இணைகிறது. கால்வாய்களில் அடைப்புகள்ஏற்பட்டு ராஜீவ் காந்தி நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. தாழ்வான பகுதி வீடுகளை சூழ்ந்து தேங்குகிறது.
இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. வீடுகளில் வசிப்போர் கழிவு நீரை மிதித்து வெளியே செல்கின்றனர். கால்வாய்கள் அவ்வப்போது மேலோட்டமாக சுத்தம் செய்யப்படுகிறதே தவிர, கழிவுகள் முழுமையாக அகற்றப்படுவதில்லை. கால்வாயை சீரமைக்கநடவடிக்கை தேவை என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.